வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 மார்ச், 2010

பாடசாலை வாழ்வில் கல்வியும் விளையாட்டும் இரு கண்களென கொள்ளுதல் வேண்டும். - யாழ். மாநகர முதல்வர் தெரிவிப்பு.



யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்றையதினம் இடம்பெற்றபோது அதில் பிரதம விருந்தினராக யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கலந்துகொண்டார்.

கல்லூரி அதிபர் திரு.நா.வன்னியசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இம்மெய்வல்லுனர் போட்டியில் சிறப்புரையாற்றிய யாழ். முதல்வர் கல்வித்துறையில் செலுத்தும் அதே ஆர்வத்தை விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் ஈடுபாடு காட்டவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கல்வித்துறை அறிவை மேம்படுத்துகின்றது. அதேபோல விளையாட்டுத்துறை சகோதரத்துவத்தை ஒற்றுமையை வளர்க்கின்றது. எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்தவகையில் எமது மாணவச் செல்வங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு அப்பால் தேசிய மட்டத்திலும் ஏன் சர்வதேச மட்டத்திலும் பிரகாசிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு தனதுரையில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’