வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 மார்ச், 2010

ஈராக் நாடாளுமன்றத் தேர்தல்:வாக்குச் சாவடிகள் அருகே மோட்டார் தாக்குதல்


ஈராக்கில் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் சலாஹுதீன் மாநிலம் மற்றும் பக்தாத்தில் மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுன்னி மற்றும் சியா முஸ்லிம்கள் கலந்து வாழும் பகுதியான மேற்கு பக்தாத்தின் வாக்குச் சாவடி அருகே இரு மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.அத்துடன் பக்தாத்தில் இரு குண்டுகள் வீதியோரத்தில் வெடித்துள்ளது. சேதவிவரங்கள் இன்னும் தெரியவரவில்லை என அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலாஹுதீனில் இடம்பெற்ற மோட்டார் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பக்தாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமான ஈராக் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் மாலை 5 மணியளவில் நிறைவடையவுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’