
கடற்கொள்ளையரின் அச்சுறுத்தலற்ற கடற்பிராந்தியத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட சர்வதேச அமைப்புக்களுக்கு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சர் வழங்கிய செவ்வியில் இது வரை ஐந்து வௌ;வேறு தடவைகள் இலங்கை மாலுமிகள் கடற்கொள்ளையரினால் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே தான் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த திங்கட்கிழமை ஏடன் குடாவில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட சவுதி அரேபிய வர்த்தகக் கப்பலான அல் நிசர் அல் சவுதியில் பணியாற்றிய பதின்மூன்று இலங்கை மாலுமிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. சோமாலியக் கடற்கொள்ளையர் இரண்டு கோடி அமெரிக்க டொலர்களை கப்பப் பணமாக கோருவதாக பல வெளிநாட்டு செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் வெளிவிவகார அமைச்சு நைரோபியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் ஊடாக தென்னாபிரிக்காவுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது முயற்சி தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ள அவர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சோமாலியக் கடற்கொள்ளையரினால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையர்களை தாயகத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’