வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 மார்ச், 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நடவடிக்கையால் யாழ் குடாநாட்டிற்கான பொருட்களை ஏற்றி இறக்கும் கட்டணம் அகற்றப்பட்டுள்ளது!



ஏ-9 தரைப்பாதையூடாக தென்பகுதியில் இருந்து யாழ் குடாநாட்டுக்கான பொருட்களைக் கொண்டுவரும் போதும் யாழ் குடாநாட்டு உற்பத்திப் பொருட்களைத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லும் போதும் பாதுகாப்பு கருதி சோதனை செயற்பாடுகளை மேற்கொள்கையில் அப்பொருட்களை ஏற்றி இறக்குவதற்குக் கட்டணமாக ஒரு தொன்னுக்கு 4150 ரூபா அறவிடப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும்.

தென்பகுதியில் இருந்து பொருட்களை யாழ் குடாநாட்டிற்குக் கொண்டு வரும்போது மேற்படி ஏற்றி இறக்கும் கட்டணம் காரணமாக யாழ் குடாநாட்டில் பொருட்களின் விலை கட்டுப்பாட்டு விலைகளையும் மீறி அதிக விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோர் தொடர்ந்தும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதே நேரம் யாழ் குடாநாட்டு உற்பத்திப் பொருட்களை தென்பகுதிக்குக் கொண்டு செல்லும் போது இதே விதமாக ஏற்றி இறக்கும் கட்டணம் அறவிடப்படுவதால் தென்பகுதி சந்தைகளில் தென்பகுதி உற்பத்திகளுடன் யாழ் குடாநாட்டு உற்பத்திகளுக்கு போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளதால் யாழ் குடாநாட்டு விவசாய மற்றும் கடலுணவு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் தென்பகுதியில் இருந்து யாழ் குடாநாட்டுக்கு மூலப் பொருட்களைக் கொண்டுவரும் போது மேற்படி ஏற்றி இறக்கும் கட்டணம் அம்மூலப் பொருட்களின் விற்பனை விலைகளுடன் சேர்க்கப்படுவதில்லை என்பதால் அம்மூலப் பொருட்களை கட்டுப்பாட்டு விலைகளில் வழங்கும் நிலைக்கு ஆளாகும் அரச மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பாதிப்புக்கள் தொடர்பில் உரிய தரப்பினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறையிட்டதையடுத்து அமைச்சர் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ யாழ் மற்றும் வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிகளுடன் கலந்துரையாடியமைக்கு இணங்க மேற்படி பொருட்களை ஏற்றி இறக்கும் கட்டணம் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் குடாநாட்டு மக்களின் நலன்கள் சார்ந்து அனைத்துத் துறைகளிலும் பல்வேறு சாதகமான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேற்படி நடவடிக்கை காரணமாக இதன் பின்னர் யாழ் குடாநாட்டில் நியாய விலையில் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளும் நிலை நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளதுடன் தங்களது உற்பத்திப் பொருட்களை அதிகளவில் போட்டியின்றி தென்பகுதியில் சந்தைப் படுத்தக் கூடிய வாய்ப்பினையும் யாழ். குடாநாட்டு விவசாய மற்றும் கடலுணவு உற்பத்தியாளர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதே நேரம் அரச மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி பொருட்களை தாராளமாகக் கொண்டு வரக் கூடிய நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’