வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 மார்ச், 2010

பண்ணை வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்!

யாழ்ப்பாணத்திலிருந்து தீவகப் பகுதிக்குச் செல்லும் பண்ணைப் பாலம் மிக நீண்ட காலமாக பழுந்தடைந்த நிலையில் காணப்படுவதால் அப்பாதையூடாக பயணம் செய்யும் பொதுமக்கள் தொடர்ந்தும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் இப்பாதையை சீர்திருத்தும் பணியை முன்னெடுப்பதற்கான பணிப்புரையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்திருந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இப்பாதையை புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் மேற்படி பாதை புனரமைப்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்து  விளக்கும் முகமாகவும் அப்பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயும் முகமாகவும் அமைச்சர் அவர்கள் இன்று நேரில் அப்பகுதிகளுக்குச் சென்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன் பிரகாரம் இப்பாதை புனரமைப்புப் பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’