மன்னார் பஸார் பகுதியில் வர்த்தர் ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கடைகள் மூடப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது கடைகள் அனைத்தையும் மூடி பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது கடைகள் அனைத்தையும் மூடி பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வர்த்தக்கர் தாக்கப்பட்டது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், டவுன் கொமாண்டர் மற்றும் மன்னார் மாவட்ட நீதிபடி ஆகியோருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.
இம்மகஜரைப் பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் சில தினங்களில் குற்றவாளிகளை கைது செய்வதாகவும் உறுதியளித்ததாக மன்னார் வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து முறபகல் 11 மணிக்கு வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன.
பஸார் பகுதியில் மருந்து விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்த முஹமது பௌசி(வயது 37) எனும் வர்த்தகரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.தாக்குதலுக்குள்ளான இவ்வர்த்தகர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்க்கட்சி ஒன்றின் ஆதரவாளர் என தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’