இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து க்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமையைக் கண்டித்து கொழும்புப் புறக்கோட்டையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடைபெற்றது
.ஜனநாயக தேசிய முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்செகாவுக்கு ஆதரவாக சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’