வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 மார்ச், 2010

கொழும்பு பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடு செய்ய ஏற்பாடு

கொழும்பு பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹிவளை, கல்கிஸ்ஸ, வெலிகட மற்றும் கொஹவெல ஆகிய பொலிஸ் நிலையங்களில் இன்றைய தினம் முதல் தமிழ் மொழியிலும் முறைப்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இதற்கு முன்னர் இவ்வாறு தமிழ் மொழியில் முறைப்பாடுகள் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழி தெரிந்த தலா நான்கு கான்டஸ்டபிள்கள் குறித்த பொலிஸ் நிலையங்களில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இனிவரும் காலங்களில் தமிழ் மொழியில் தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’