வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 மார்ச், 2010

யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தவர்கள் இன்று தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றனர் அமைச்சர் மித்திரபால

Loogix.com. Animated avatars. ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது ஆட்சிக்காலத்தில் ஆசியாவில் சிறந்து விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகத்தை எரித்தவர்கள் இன்று தமிழ் மக்களிடம் வடக்கே வாக்கு கேட்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் எச்.ஆர்.மித்திரபால தெரிவித்தார்.
தெரணியகலை பொல்கஸ்வத்தயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து பேசிய அவர்;ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று நாட்டை முன்னேற்றப்போவதாகவும் சகல இன மக்களையும் ஒற்றுமையாக வாழ வைக்கப்போவதாகவும் கூறிவருகின்றனர்.
இந்த நாட்டில் ஒற்றுமையை சீர்குலைத்து 1977, 1983 இனக்கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களை விரட்டி அடித்தவர்கள் தான் ஐக்கிய தேசியக் கட்சியினர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் இதயம் என்று கூறப்பட்ட பொது நூலகத்தையும் எரித்தவர்கள்.அதுமட்டுமல்ல இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவும் சமஷ்டி தீர்வு ஒப்பந்தத்துக்கு எதிராக பாதயாத்திரை செய்து அதனை செயற்படாமல் தடுத்தவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே.
ஜனாதிபதி சந்திரிகா கொண்டுவந்த தீர்வுத்திட்டத்தையும் பாராளுமன்றத்தில் தீயிட்டு எரித்தவர்கள். ஆனால் இன்று தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேசுகின்றனர்.இவற்றை அன்று செய்யாமல் விட்டிருந்தால் இனப்பிரச்சினை என்ற ஒன்று ஏற்பட்டிருக்காது. யுத்தமும் மூண்டு அழிவுகள் நிகழ்ந்திருக்காது.இன்று தமிழ்மக்களுக்கு உரிமைகளைத் தருவதாகக் கூறி வடக்கு,கிழக்கில் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு தமிழ் மக்கள் இத்தேர்தலில் நல்லதொரு பாடத்தைப் புகட்டுவார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியினர் இனிமேல் ஒருபோதுமே ஆளப்போவதில்லை. அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளும் தரப்பிற்கே வருகின்றனர்.எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மேலும் பல ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்முடன் இணைவார்கள்.கோகாலை மாவட்டத்தில் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக இடங்களைப் பெறும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’