போலி மருந்துகள் விற்பனை தொடர்பில் தமிழக அரசு கடும் எச்சரிக்கை |
போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்துகளை விற்றால் ஆயுள் தண்டனை உறுதி என தமிழக அரசு எச்சரித்துள்ளது
தமிழகத்தில் போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்றால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று தமிழக அரசு ஆறு மாதங்களுக்கு முன்னர் சட்டம் இயற்றியது.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெருமளவில் போலி மருந்துகளும் காலாவதியான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் பின்புலத்தின் இந்தச் சட்டத்தின் கீழ் தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பிலான உயர்மட்டக் கூட்டம் ஒன்றும் இடம் பெற்று மருந்து தயாரிப்பாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு மற்றும் அதன் தரம் தொடர்பில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், சிறிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை முழுமையாக கடைபிடிப்பதில்லை என்றும் நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆணையகத்தில் போதிய ஆட்கள் இல்லாமையும், தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தை சோதிக்க தேவையான அளவு சோதனைச்சாலைகள் இல்லாமல் இருப்பதும் போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’