வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 மார்ச், 2010


 

அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடனுடன் அதிபர் ஒபாமா
அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடனுடன் அதிபர் ஒபாமா
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா முன்வைத்த முக்கியத்துவம் மிக்க மருத்துவ காப்புறுதி மசோதா சட்டமாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று அதிபர் ஒபாமா இந்த சட்டமூலத்தில் கையொப்பம் இட்டதன் மூலம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
நம்பிக்கை
 பல தலைமுறைகளாக அமெரிக்கர்கள் விரும்பிவந்த சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்ககூடிய ஒரு சட்டத்துக்கு நான் இப்போது ஒப்புதல் அளித்துள்ளேன்.
 
அதிபர் ஒபாமா

இந்த புதிய சட்டத்தின் மூலம் தற்போது
எந்தவிதமான மருத்துவ காப்புறுதியும் இல்லாத மூன்று கோடி அமெரிக்க மக்களுக்கு மருத்துவ காப்புறுதி வசதி கிடைக்கும்.
இந்த சட்டத்தை எதிர்கட்சியான குடியரசு கட்சி கடுமையாக எதிர்த்து வந்தது.
எனினும் இந்த சட்டம் தேவைதானா என்று அவர்களால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல்களுக்கு முன்னர் அதிபர் ஒபாமா பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’