![]()  | |
| போலிக் கடவுச்சீட்டு வழக்கில் சிக்கியுள்ளவர்கள் | 
பிரிட்டிஷ் கடவுச்சீட்டு பிரச்சினை காரணமாக இஸ்ரேல்  ராஜதந்திரி வெளியேற்றம்
பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகளை இஸ்ரேல் தவறாக பயன்படுத்திய  குற்றச்சாட்டு தொடர்பாக பிரிட்டனிலிருந்து இஸ்ரேல் ராஜதந்திரி ஒருவரை பிரிடிஷ் அரசு  வெளியேற்றியிருக்கிறது. 
ஜனவரி மாதம் துபாயில் பாலஸ்தீன ஹமாஸ் தலைவர்  ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளில் பலர் போலியான பிரிட்டிஷ்  கடவுச்சீட்டுக்களை தம்வசம் வைத்திருந்தார்கள். 
அந்த கடவுச்சீட்டுக்கள் பிரிட்டிஷ் இஸ்ரேல் இரட்டைக்குடியுரிமை  பெற்றவர்களுக்கு சொந்தமானவை.கொலை செய்தது இஸ்ரேலிய உளவுத்துறையினரே என்பதற்கு பிரிட்டனிடம்  ஆதாரம் இல்லையென்றும் இதுபற்றிய குற்றச்சாட்டை துபாய் அதிகாரிகள்  முன்வைக்கிறார்கள்ல் என்றும் ராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 
மூன்று கோடி அமெரிக்கர்களுக்கு மருத்துவ காப்புறுதி  அளிக்கும் சட்டம் நிறைவேறியது
 ![]()  | |
| வெற்றிக் களிப்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா | 
செவ்வாய்க்கிழமையன்று அதிபர் ஒபாமா இந்த சட்டமூலத்தில்  கையொப்பம் இட்டதன் மூலம் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் தற்போது எந்தவிதமான மருத்துவ  காப்புறுதியும் இல்லாத மூன்று கோடி அமெரிக்க மக்களுக்கு மருத்துவ காப்புறுதி வசதி  கிடைக்கும். 
இந்த சட்டத்தை எதிர்கட்சியான குடியரசு கட்சி கடுமையாக எதிர்த்து  வந்தது.
எனினும் இந்த சட்டம் தேவைதானா என்று அவர்களால் எழுப்பப்பட்டுள்ள  கேள்விகளுக்கு அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல்களுக்கு முன்னர் அதிபர் ஒபாமா  பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளார். 
பர்மாவில் புதிய தேர்தல் சட்டவிதிமுறைக்கு ஆங் சான் சூசி  எதிர்ப்பு 
 ![]()  | |
| பர்மாவின் எதிர்கட்சித் தலைவியான ஆங் சான் சூசி அம்மையார் | 
பர்மாவில் இருபதாண்டுகளுக்கு பிறகு நடக்க இருக்கும்  பொதுதேர்தல்களில் போட்டியிடவேண்டுமானால் கட்சிகள் மீண்டும் தங்களை பதிவு  செய்துகொள்ள வேண்டும் என்கிற விதியின் கீழ் தமது கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய  லீக் கட்சி பதிவுசெய்வதை தாம் விரும்பவில்லை என்று தற்போது தடுப்புக்காவலில் உள்ள  அக்கட்சியின் தலைவியான அங் சாங் சூசி அம்மையார் தெரிவித்துள்ளார். 
பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களால் அண்மையில் அறிவிக்கப்பட்ட  தேர்தல் சட்டங்கள் நியாயமற்றவை என்று, சூசி தம்மிடம் தெரிவித்தார் என்று அவரது  வழக்கறிஞர் கூறியுள்ளார். 
ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி எதிர்வரும் திங்கட்கிழமை  கூடும்போது இந்த விடயம் தொடர்பாக கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்று ஆங் சாங்  சூசி தெரிவித்துள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் கூறுகிறார். 
பர்மாவில் பொதுத்தேர்தல் இவ்வாண்டில் நடத்தப்படும் என்று இராணுவ  அரசு அறிவித்திருந்த போதிலும் அதற்கான தேதி இன்னமும் குறிப்பிடப்படவில்லை.

  












தமிழோசை

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’