
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட ஒஸ்லோ பிரகடனக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்ட ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
2002ம் ஆண்டு ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இந்த ஒஸ்லோ இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நோர்வே அரசாங்கத்தின் தலையீட்டுடன் கூடிய எந்தவொரு தீர்வுத் திட்டத்திற்கும் இணங்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’