வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 மார்ச், 2010

இலங்கையில் பான் கீ மூன் நிபுணர்கள் குழு அமைப்பதற்கு காட்டிய எதிர்ப்பை அணிசேரா நாடுகள் விலக்கியுள்ளன



இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமிக்கவிருந்த நிபுணர்கள் குழு தொடர்பில் தமது எதிர்ப்பை காட்டிய, அணி சேரா நாடுகள் தமது எதிர்ப்பை விலக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழுவை நியமிப்பது தொடர்பில் இலங்கையுடன் இணைந்து அணிசேரா நாடுகள் அமைப்பு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தது. எனினும் அந்த எதிர்ப்பு தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூன், அணி சேராநாடுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த குழு, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து தமக்கு அறிவுறுத்தும் ஆலோசனை குழு மாத்திரமே என பான் கீ மூன் அதில் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதன் கீழேயே இந்த குழுவை நியமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பான் கீ மூன், தாம் நியமிக்கவுள்ள குழு, போர் குற்றவியல் விசாரணை ஆணைக்குழு இல்லை என தெளிவுபடுத்தியதை அடுத்து, அணிசேரா நாடுகள் இதுநாள் வரையில் காட்டி வந்த எதிர்ப்பு தளர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’