காலநிலை சீரானதும் சுமார் 5000 கிலோ மீற்றர் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்வதற்கு ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் தயாராகி வருகிறார்கள் என்று அவுஸ்திரேலியாவின் டெய்லி ரெலிகிறாப்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆட்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்லும் முகவர்கள் பாரம்பரிய வழியான இந்தோனேசியா, மலேசியா ஆகியவற்றை தவிர்த்து ஆபத்தான பாதைகள் வழியாக நேரடியாக கிறிஸ்மஸ் தீவுக்கு மக்களை கொண்டு செல்ல இருக்கிறார்கள் என்று சிரேஷ்ட கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட இலங்கை கடற்படை அதிகாரிகள் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகளுடன் இத்தகைய சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் ஒரு மாதத்திற்கு முன்னரே உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தியதுடன், சட்டவிரோத ஆட்கடத்தல்களால் மனித நேய நெருக்கடிகள் அதிகரிக்கும் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..
இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் கரையோரப் பகுதியிலிருந்து கடந்த வருடம் பல அகதிகள் படகுகள் அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டதாக செய்திகள் வெளியான போதிலும் தாங்கள் இது பற்றி அறியவில்லை என்று சிரேஷ்ட இலங்கை கடற்படையினர் தெரிவித்ததாக அந்த பத்திரிகை செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’