முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் தாமே அரசாங்கத்திற்கு அறிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆய்வு ஒன்றை நடத்திய போது இந்த தகவல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவிற்கு அரசாங்கம் பூரண எதிர்ப்பை வெளியிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையினால் சில மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய விடயங்களை தோண்டித் தேடுவதனை விடவும், அவற்றை மறந்துவிடுவதே சாலச் சிறந்ததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான அடிப்படை நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான முறையில் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் சிக்கல் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’