-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
சனி, 20 பிப்ரவரி, 2010
யாழ். மாநகரசபைக்கு கழிவகற்றும் இயந்திரம் மற்றும் தண்ணீர் பவுஸர் புதிதாக கிடைக்கப்பெற்றுள்ளன.
யாழ். மாநகரசபையின் பாவனைக்கென யுனொப்ஸ் நிறுவனம் பெறுமதிமிக்க கழிவகற்றும் இயந்திரம் ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ள அதேவேளை யாழ். அரசாங்க அதிபர் தண்ணீர் பவுஸர் ஒன்றினையும் அன்பளிப்புச் செய்துள்ளார்.
யாழ். மாநகர சபைக்கு அவசியமாகத் தேவைப்படும் மேற்படி இரு அத்தியாவசியமான வாகனங்கள் தொடர்பாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அரசாங்கத்திடமும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் தெரியப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஐ.நாவின் சர்வதேச அமைப்புக்களில் ஒன்றான யுனொப்ஸ் அமைப்பானது கழிவகற்றும் இயந்திரம் ஒன்றினை யாழ். மாநகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. தற்சமயம் வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டுள்ள மேற்படி கழிவகற்றும் இயந்திரத்தை பொறுப்பேற்பதற்காக யாழ். மாநகரசபை உத்தியோகத்தர்கள் வவுனியாவிற்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது. ஏ9 பாதை திறக்கப்பட்டு பெருமளவு பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையிலும் இதன்காரணமாக தங்குமிடங்கள் ஹோட்டல்கள் விடுதிகள் என்பன அதிகரித்துள்ள நிலையிலும் மேற்படி கழிவகற்றும் இயந்திரங்கள் கிடைத்துள்ளமை பெரிதும் பிரயோசனமாக உள்ளதாக யாழ். மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ். மாநகர சபைக்குட்பட்ட அதிகரித்த குடிநீர்த் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக யாழ். அரசாங்க அதிபர் திரு.கே.கணேஷ் அவர்கள் யாழ். மாநகரசபையின் பாவனைக்கென குடிநீர் பவுஸர் ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ளார். மேற்படி பவுஸரை யாழ். அரசாங்க அதிபரிடமிருந்து யாழ். மாநகர முதல்வர் உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’