வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 பிப்ரவரி, 2010

25ம் திகதி ஆரம்பமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்தையொட்டி தடையற்ற பயண ஏற்பாட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்பாடு.


இம்மாதம் 25ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் தடையற்ற பிரயாணத்தை மேற்கொள்ளும்முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கச்சதீவு உற்சவத்தில் பங்குகொள்ளும் யாழ். மறைமாவட்டத்தினர் விடுத்த வேண்டுகோளை அடுத்து அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்புகொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து கச்சதீவு செல்லவிருக்கும் பக்தர்கள் நேரடியாகவே குறிக்கட்டுவான் இறங்கு துறையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பக்தர்கள் எவ்வித பாதுகாப்பு அனுமதியும் பெறத்தேவையில்லை என்பது இங்கு முக்கிய விடயமாகும். இதேவேளை கச்சதீவிற்காகன பயணிகள் படகுச் சேவையினை மேற்கொள்ளவுள்ளோர் பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் தீவக கடற்படை பொதுசன தொடர்பு அதிகாரியிடம் அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொண்டு குறிக்கட்டுவானிலிருந்து கச்சதீவிற்கான சேவையினை நடாத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமது சொந்த படகுகளில் அல்லது ஆலய பங்கு மக்களாக படகுகளை வாடகைக்கு அமர்த்திச் செல்வோரும் அப்படகுகள் தொடர்பாக அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கச்சதீவு செல்லும் பக்தர்கள் அங்கு இரவு தங்கிநின்று வருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் தமது உணவு மற்றும் குடிநீர்த் தேவைகளை பக்தர்களே கவனிக்க வேண்டும் எனவும் எனவே அதற்குரிய ஆயத்தங்களுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’