வசதி குறைந்த வீடமைப்புத் திட்டங்களை மேம்படுத்தவும் குடிசைகளை குடியேற்றத் திட்டமாக்கவும் ஏற்படுத்தப்பட்ட நகரத்தை மேம்படுத்துவோம் திட்டம் இன்றையதினம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட நகரத்தை மேம்படுத்துவோம் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்விற்கு அலரிமாளிகையில் இருந்து செய்மதி தொலைகாட்டி மூலம் இணைந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கிராமத்திற்கு மாத்திரமன்றி நகரத்தையும் பொறுப்புடன் மேம்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்கள் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துவைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டதுடன் இலங்கையை ஆசியாவில் கௌரவமான நாடாக உருவாக்குவதே தமது பிரதான குறிக்கோள் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனைத்தொடர்ந்து கொள்ளுப்பிட்டி முகாந்திரம் வீதி தோட்டப்பகுதியில் ஆரம்பித்து இடம்பெற்றுக்கொண்டிருந்த நகரத்தை மேம்படுத்துவோம் திட்டப்பகுதிக்கு திடீர் விஜயத்தை ஜனாதிபதி மேற்கொண்டார். அப்பகுதி மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் ஜனாதிபதியை வரவேற்றனர். ஜனாதிபதியுடன் அமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கொழும்பு மாநகரசபை விசேட ஆணையாளர் ஓமர் காமில் ஆகியோரும் உடன் சென்றனர்.
மஹிந்த சிந்தனைக்கமைய மேற்கொள்ளப்படும் நகரத்தை மேம்படுத்துவோம் திட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபை இலங்கை மின்சார சபை கொழும்பு மாநகரசபை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை என்பன இணைந்து பங்களிப்பினை மேற்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’