-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 22 பிப்ரவரி, 2010
ஒரு ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி
தென்னாப்பிரிக்கா அணிக்கும் இந்தியா அணிகளுக்கிடையிலுமான ஒருநாள் போட்டியில் இந்தியா அணி ஒரு ஓட்டத்தால் போராடி வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூரில் நடந்து வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பகலிரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சச்சின் 4 ஓட்டங்களுடனும், செவாக் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்காக களமிறங்கிய தினேஸ் கார்த்திக் 44 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் தோனி 26 ஓட்டங்களுடனும்;, விராட் கோலி 31 ஓட்டங்களுடனும் , யூசுப் பத்தான் 18 ஓட்டங்களுடனும் , ரவீந்திர ஜடேஜா 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரெய்னா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். எனினும் அவர் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
எனவே நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்களை பெற்றது. நெஹ்ரா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
299 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 பெற்று ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆதால்வியை தழுவியது. இதன் மூலம் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் கலிஸ் 81 ஓட்டங்களை அணிக்காக பெற்று கொடுத்தார். பந்து வீச்சில் ஜடேஜா மற்றும் பிரவின் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். போட்டியின் ஆட்ட நாயகனாக ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்று தொடர் சமநிலையில் முடிந்தது இருந்தமை குறிப்பிடதக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’