வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஐ.ம.மு வேட்பாளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நாளையுடன் முடிவு:பாலித ரங்கே பண்டார


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் இறுதி பணிகள் 23 ஆம் திகதியுடன் முடிவடைந்துவிடும் என்று புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,புத்தளம் மாவட்ட குழுத் தலைவருமான பாலித ரங்கே பண்டார கூறினார்.

சில மாவாட்டங்களில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்,கையொப்பம் இடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் தெரிவு குறித்தும்,இட ஒதுக்கீடுகள் குறித்தும் தொடர்ந்து பேச்சக்கள் இடம்பெற்று வருவதாகவும் குழுத் தலைவர் பாலித ரங்கே பண்டார கூறினார்.

அதேவேளை ஜெனரல் சரத் பொன்செகா தலைமையிலான புதிய ஜனநாக முன்னணியும் சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாக ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் முஹம்மத் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அதேநிலையில் தற்பொது இலங்கை அரசயலில் மிகவும் பிரபலங்களாக பேசப்பட்டுவரும்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர,ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்று மாலைக்குள் தமது இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளதாக இஸ்மாயில் கூறினார்.

கிழக்கில் தமது அணி வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளதாகவும் வடமாகாணத்தில் வேட்பாளர்கள் தெரிவு இடம் பெறுவதாக தெரிவித்த அவர் எவ்வாறாயினும் திங்கட்கிழமை மாலை பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்துவிடும் என்றும் 25 ஆம் திகதி வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னால் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் இம்முறை,புத்தளம் மாவட்டத்தில் அல்லது வன்னி மாவட்டத்தில் வெற்றிக் கிண்ணம் சின்னத்தில் போட்டியிவுள்ளதாகவும் இஸ்மாயில் மேலும் கூறினார். புத்தளம் மாவட்டத்தில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’