-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 22 பிப்ரவரி, 2010
அம்பாறை மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பதற்கு அரசியல் தலைவர்கள் ஒரே குடையின் கீழ் போட்டியிட வேண்டும்
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள், வரும் பொதுத் தேர்தலில் பல கூறுகளாக பிரிந்து போட்டியிடுவதை தவிர்த்து, தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்கு பேதங்களை மறந்து ஒரே குடையின் கீழ் போட்டியிட வேண்டும். என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் முகாமைத்துவ சபை அவசரமாக கூடி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழி யர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன், பொதுச் செயலாளர் என். சத்தியமோகன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
கடந்த கால அரசியல் வரலாற்றை பின் நோக்கிப் பார்க்கும் போது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பல கூறுகளாக பிரிந்து நின்றமையால் தமக்குரிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து அரசியல் அனாதைகளாக மாறிய நிலையை மறந்து விடலாகாது.
இந் நிலையில் பெரியநீலாவணை தொடக்கம் பாணமை வரையுமாக சிதறிக் கிடக்கும் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவதை தட்டிக் கேட்கவும் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாக வேண்டும்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கமைய பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் எமது மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை, வன்மம் பாராட்டாமை என்பவற்றை கருத்திற் கொண்டு அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் தீர்க்கமான முடிவினை எடுத்து தேர்தல் களத்தில் ஒற்றுமையுடன் குதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக எமது சங்கத்தின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட எண்ணியிருந்த முடிவையும் அறிவிப்பையும் வாபஸ் பெறுவதாக பொது மக்களுக்கு அறியத் தருகின்றோம் என குறிப்பிடபட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’