-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு, கிழக்கில் பின்னடைவு ஏற்படும்?
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியும், இந்தமுறை பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் பின்னடைவை சந்திக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபியின் ஆதரவுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா, வடக்குகிழக்கில் 571 ஆயிரத்து 67 வாக்குகளை பெற்றிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 345 ஆயிரத்து 221 வாக்குகளையே பெற்றிருந்தார்.
இந்தநிலையில் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாவும் பிரிந்த நிலையில் செயற்படுவதால் சரத் பொன்சேகாவின் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்.
அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற 22 ஆசனங்களுக்கு பதிலாக 10 ஆசனங்கள் வரையிலேயே பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்வுகூறப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்டு 22 ஆசனங்களை பெற்றது.
எனினும் தற்போது அந்தக் கூடடமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், சிவாஜிலிங்கம் - ஸ்ரீகாந்தா கூட்டு, சிவநாதன் கிசோர்- தங்கேஸ்வரி – கனகரட்னம் கூட்டு, என மூன்று குழுக்கள் பிரிந்துள்ளன.
மறுபுறத்தில் கிழக்கில் கருணா, பிள்ளையான் தரப்புகள் களத்தில் உள்ளன. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, சித்தார்த்தன் தலைமையிலான புளொட் என்பனவும் அதிகளவான தமிழ் சுயேட்சைக்குழுக்களும் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.
எனவே இவையாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆசனங்களுக்கு அச்சுறுத்தலாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனினும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து வடக்குகிழக்கில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_க்கு உரிய பலன்கள் கிடைக்கும் என எதி;ர்பார்க்கப்படுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’