வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

தோழர் இளங்கோவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பெருந்தொகையானோர் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

காலஞ்சென்ற தோழர் இளங்கோவின் (கணபதிப்பிள்ளை ரவீந்திரன்) இறுதிநிகழ்வுகள் பெருந்தொகையான அரசியல் தலைவர்கள் தோழர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் கொழும்பு கனத்தை மயானத்தில் இடம்பெற்றது.

முன்னதாக பொரள்ளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவருடைய பூதவுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஈபிஆர்எல்எவ் மற்றும் ஈபிடிபி உள்ளிட்ட ஜனநாயக அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் சாரிசாரியாக வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்கள். இச்சமயம் புலம் பெயர்ந்திருந்த தோழர் இளங்கோவின் உறவினர்களும் குடும்பத்தினருடன் பெரும் சோகத்துடன் காணப்பட்டனர்.

இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற நிலையில் முக்கிய அரசியல் தலைவர்களும் குடும்ப உறுப்பினர்களும் தமது இரங்கல் உரையினை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் வாழும் தோழர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு தோழமைக்கும் நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்த தோழர் இளங்கோவின் பூதவுடன் இன்று நண்பகல் அக்கினியுடன் சங்கமமானபோது அவரது குடும்பத்தினருடன் ஈபிடிபி செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஈபிஆர்எல்எவ் (நாபா) செயலாளர் நாயகம் தோழர் தி.சிறிதரன் ஆகியோருடன் பெருமளவு தோழர்களும் பொதுமக்களும் அவருக்கு தமது இறுதி மரியாதை செலுத்தி விடைகொடுத்தனர்.
விடைகொடுத்தனர்.



















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’