வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

உலகின் பிரமாண்டமான பயணிகள் விமானம் கொழும்பின் ஊடாகவும் சேவைகளை நடாத்தவுள்ளது


இலங்கையின் விமான சேவைச் சரித்திரத்தில், முதன் முறையாக உலகத்திலேயே அதிக எண்ணிக்கையான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய பிரமாண்டமான விமானம் தமது சேவைகளைக் கொழும்பின் ஊடாகவும் நடத்தவுள்ளது.

டுபாய்க்கும் சிட்னிக்கும் இடையே வாரத்தில் நான்கு நாள் சேவைகளை நடத்திவரும் எமிரேட்ஸ் எயார் பஸ் சுப்பர் ஜம்போ எனப்படும் இந்த சேவை நாளை முதல் அவசர தேவைகளுக்காகவும் மருத்துவ தேவைகளுக்காகவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சேவைகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏயார் பஸ் இரண்டு தட்டுக்களை கொண்ட அதிசொகுசு தரத்தைக் கொண்ட நான்கு இயந்திரங்களின் செயற்பாடுடன் பயணிக்கும் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய கொன்சோட்டியத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் முதன் முதலாக தமது சேவையை 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 27 ம் திகதி வர்த்தக ரீதியாக ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’