
எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து சரத்பொன்சேகாவின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பில் ஜே.வி.பி. முரண்பட்ட கருத்தை கொண்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்ற நிலையில் ஜனாதிபதியை ரணில் விக்கிரமசிங்க சந்தித்திருக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து எதிர்கட்சிகள் பல ஆர்ப்பாட்டங்களை அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்கின்றன இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்துள்ளமை அந்த போராட்டங்களை பலமிழக்கச் செய்யும் வகையில் அமைந்திருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய தேசிய கட்சி நிராகரித்துள்ளது. ஜனநாயகமான நாடு ஒன்றின் ஜனநாயகமான எதிர்கட்சி தலைவர் ஒருவர் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை சந்திப்பது ஒன்றும் பிழையானதல்ல என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகாவை சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியவரே ரணில் விக்கிரமசிங்க தான் இந்நிலையில் அவரது விடுதலை தொடர்பில் பேசவே ஜனாதிபதியை அவர் சந்தித்தார் எனவே இதில் சூட்சுமம் இருப்பதாக கருதுவது பிழையானது என சுட்டிக் காட்டியுள்ளனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’