-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
புதன், 24 பிப்ரவரி, 2010
சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகில் அழுகிய நிலையில் சடலம்
கொழும்பு ஜெயவர்த்தனபுரவுக்கருகில் உள்ள ஏரியில் இன்று புதன்கிழமை (24.02.10) சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயகமான நாடாளுமன்றக் கட்டட்திலுள்ள சபாநாயகரின் வீட்டுக்குப் பின்புறமாக உள்ள நீரேரியிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது
மிகவும் பரபரப்ரப ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் குறிப்பாக ஊடகத்துறையினர் பல சந்தேசங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜனவரி 25ம்திகதிக்கு முன்னர் அதாவது ஜனாதிப்பதித் தேர்தலின் பின்னர் மகிந்தாவை மிகக் கடுமையாக விமர்சித்த லங்கா ஈசெய்தி இணையத்தளத்தின் பத்திரிகை ஆசிரியரும் சிறந்த கேலிச்சித்திர வடிவமைப்பாளருமான பிரகீத் எக்நேலியகொட காணாமல்ப் போன சம்பவம் தொடர்பில் இதுவரை எந்த ஒரு பதிலும் ஹோமாகம காவற்துறையினருக்குக் கிடைக்காத நிலையில் அவரது குடும்பத்தினர் மிகக் கலக்கம் அடைந்துள்ளனர்.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரசாத் ஜயகொடியும் குறித்த ஊடகவியலாளரது விசாரணை தொடர்பில் இதுவரையிலும் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்றே கடந்த 2005 ஏப்ரல் மாதம் 28ம் திகதி பிரபல ஊடகவியலாளர் சிவராம் பம்பலப்பிட்டி காவல்துறை நிலையம் முன்பாக வைத்துக் கடத்தப்பட்டு பாராளுமன்றக் கட்டடத்திற்கு பின்புறமாக சடலமாக மீட்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’