வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய முகம்கள் பல களத்தில்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவென புதுமுகம்கள் அறிமுகப் படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாக அறி முகப்படுத்தப்படுபவர்கள் யாழ். சமூகத்துடன் நல்லுறவை பேணி வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல புது முகம்களை களத்தில் இறக்கியுள்ளனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் தமிழரசுக் கட்சி செயலாளர் குலநாயகம், சட்டத்தரணி ரெமேடியஸ், யாழ்.பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர், யாழ்.பல்கலைக் கழக மாணவன், நல்லூர் ஆசிரியர் ஒருவர், சாவகச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர், கிளிநொச்சியின் பாடசாலை அதிபர், தமிழர சுக் கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

இது தொடர்பான இறுதி முடிபு இன்று ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரும் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்கும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியுடன் இணைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் உத்தியை அரசு உட்பட பல் வேறு தரப்பினரும் மேற்கொண்டுள்ளன. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.இவற்றினை கருத்தில் கொண்டு யாழ். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை தேர்தல் களத்தில் ஈடுபடுத்த கூட்டமைப்பு முடிபு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் சிவாஜிலிங்கத்தின் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஆளும் தரப்பினர் எவரும் வெற்றி கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’