வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த மேலும் ஆவணங்கள் தேவை:இந்தியா


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மரபணு பரிசோதனையின் மூலம் பிரபாகரனின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பிலான இலங்கையின் ஆவணங்கள் இந்திய நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப் போதுமானதாக அமையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய ஆவணத்தினை இலங்கை வழங்கியுள்ளதாக சி.பி.ஐ. தமக்குத் தெரிவித்ததாக இந்திய உட்துறை அமைச்சர் இம்மாதம் தெரிவித்திருந்தார்.

எனினும் அவ் ஆவணங்கள் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லாமையால் சி.பி.ஐ. இன் பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவர் மேலும் சில ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. __

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’