
தேர்தல் சின்னம் குறித்து ஐ.தே.கவும் மக்கள் விடுதலை முன்னணியும் மாற்றுக் கருத்தினை கொண்டிருக்கும் நிலையில் அது தொடர்பான முக்கியமான சந்திப்பொன்று ம.வி.முன்னணிக்கும் ஜ.ம.முன்னணிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடப்போவதாக ஜே.வி.பியும் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஐ.தே.கவும் அறிவித்தன. ஜே.வி.பியின் நிலைப்பாடு தொடர்பில் தாம் ஆராய்ந்து முடிவினை அறிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.
இவ்விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினர்களை ஜனநாயக மக்கள் முன்னணியினர் இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி தமது யானைச் சின்னத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என அக்கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’