
உணவு விஷமானதையடுத்து, மாத்தளை புத்த கோஷ மகா வித்தியாலயம், ஆனந்த மத்திய மகா வித்தியாலயம், டொடன்வெல ராகுல வித்தியாலயம் ஆகிய 3 பாடசாலைகளைச் சேர்ந்த 129 பாலர் வகுப்பு மாணவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் கவிஷ்கா தனன்ஜனி கமகே எனும் 10 வயது மாணவி மரணமானார்.
தற்போது 40 மாணவர்கள் உடல் தேறிய பின் வீடு திரும்பியுள்ளனர்.
தேசிய பாடசாலைகள் உணவு விநியோகத் திட்டத்தைச் சேர்ந்த கணவர்-மனைவி இருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுப் பின்னர், மனைவி மட்டும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 50,000 ரூபாவை உயிரிழந்த மாணவியின் மரணச் சடங்குக்கு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’