
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் சனிக்கிழமை சேவையில் ஈடுபட்ட இரவு நேர தபால் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலில் இருந்து தவறுதலாக வீழ்ந்து மரணமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம், யசசிரிபுர பகுதியிலுள்ள கறுப்புப் பாலப் பகுதியில் நள்ளிரவு 12.00 மணியளவிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுர நகரிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
விடுமுறை முடிவடைந்து அம்பேபுஸ்ஸவிலுள்ள இராணுவ முகாமுக்கு கடமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது ரயிலிலிருந்து தவறுதலாக வீழ்ந்த இவரை சக இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க எடுத்துச் சென்ற வேளையில் இடையில் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’