
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையில், அமைக்கப்படும் புதிய கூட்டணியின் கீழ் தமது கட்சி உட்பட்ட ஏனைய கட்சிகள் போட்டியிடவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு சேர்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி மற்றும் மங்கள சமரவீரவின் கட்சி என்பவற்றுக்கிடையிலான இணக்கப்பாடு முறிவடைந்துள்ளது.
பொது சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சிக்கான சின்னம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனக்குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர உட்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி இந்தமுறை தமது யானை சின்னத்தில் போட்டியிடவேண்டும் என எடுத்த தீர்மானத்தை ஜேவிபி கண்டித்துள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’