எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அழைத்து சரத்பொன்சேகா கைதுதொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. சரத்பொன்சேகா கைதுதொடர்பில் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் பிலிப் ஜே. க்ரம்லி, ஜாலிய விக்ரமசூரியவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இலங்கையின் சட்டவிதிகளுக்கு அமைவாகவே ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. எந்த சட்டத்தின் அடிப்படையில் ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் விளக்கப்பட வேண்டுமென க்ரம்லி தெரிவித்துள்ளார்
-













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’