
களனிவெளி வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்றும் நாளையும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொட்டாவை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளுக்கான ரயில் பாதையில் திருத்தப் பணிகள் மேற்கொள்வதன் காரணமாகவே குறித்த பகுதிக்கான ரயில் சேவையை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அவிசாவளையில் இருந்து இன்று காலை 6.00 மணிக்கு புறப்பட்ட ரயில் இன்று காலை 7.43 அளவில் கொட்டாவை ரயில் நிலையத்தை வந்தடைந்த பின்னர் அந்த பகுதிகளுக்கான சேவையானது நாளை பிற்பகல் வரை இடம்பெறாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அவிசாவளையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது நாளை பிற்பகல் 4.10 அளவில் இடம்பெறுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது இன்று பிற்பகல் 2.25 மணிக்கும் கொட்டாவையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயில் சேவை மீண்டும் நாளை காலை 7.43மணிக்கும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’