வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானா


மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனை மேயர் பதவியிலிருந்நு உடனடியாக நீக்க வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானா தெரிவித்துள்ளதாவது:-

இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது அமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட தேர்தலில் எமது வேட்பாளர்களையும் நிறுத்தியது.

எமது கட்சியின் மூலம் நிறுத்தப்பட்ட வேட்பாளரான சிவகீதா பிரபாகரன் வெற்றி பெற்றதையடுத்தே அவரை மட்டக்களப்பு மாவட்ட மேயராக நியமிக்க வேண்டுமென நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர் பீடத்தைக் கேட்டிருந்தோம். அதற்கமைவாகவே அவருக்கு மேயர் பதவியும் வழங்கப்பட்டது.

ஆனால், அவர் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தார். இதற்கு முன்னர் கூட எமது கட்சியின் ஆலோசனைகளைப் பெறாத நிலையிலேயே சில முடிவுகளையும் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இவரை எமது கட்சியில் தொடர்ந்தும் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த விடயத்தில் எமது கட்சிக்கு தார்மிகப் பொறுப்புள்ளது. அதனை நிறைவேற்றவும் வேண்டியுள்ளது. இதன் முதல்கட்டமாக மட்டக்களப்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இவரை நீக்க வேண்டியுள்ளது.

இது தொடர்பாக நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் எமது நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளதுடன் அவரை உடனடியாக மேயர் பதவியிலிருந்து நீக்குமாறும் கேட்டுள்ளோம்.

இதுதவிர, மட்டக்களப்பு மாநகரசபையால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றும் கொண்டு வரப்பட்டு அதிலும் கூட அவருக்கு எதிராக பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்'' என்றார்.

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கத்தவர். அந்தக் கட்சியினால்தான் எனது விவகாரங்களைக் கையாள முடியும்.

என்னை மேயர் பதவியிலிருந்து நீங்குமாறோ அல்லது நான் நீக்கப்பட்டுள்ளதாகவோ கூட்டமைப்பின் செயலாளரான சுசில் பிரேம்ஜயந்தவிடமிருந்து எவ்வித அறிவித்தலும் எனக்குக் கிடைக்கவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதா இல்லையா என்று நானே தீர்மானிக்காத நிலையில் என்னைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வது பற்றி மற்றவர்கள் ஆலோசிப்பதில் எவ்வித பயனுமில்லையென்று அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’