வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

புதிய கூட்டு முன்னணிக்கு சரத் பொன்சேகா ரணிலுக்கு அழைப்பு: அனோமா தேர்தலில் போட்டி?


தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல் வேட்புமனுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இந்தநிலையில் இந்த திகதிக்கு முன்னர் சரத் பொன்சேகா விடுவிக்கப்படாவிட்டால், தாம் தேர்தலில் போட்டியிடப்போவதாக அனோமா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே வி பியும் இணைந்து மீண்டும் புதிய கூட்டணியில் போட்டியிடவேண்டும் என தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா, தமது மனைவியின் மூலமும் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் விஜயதாஸ ராஜபக்ச மூலமும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து இந்தக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்துவதற்காக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட்ட கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒருமுறை சந்திக்கவுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’