| இன்றுகாலை யாழ்ப்பாணம் வந்தடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ். நாகவிகாரைக்கு விஜயம் செய்தார். இன்று முற்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சகிதம் யாழ். நாகவிகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை நாகவிகாராதிபதி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி விசேட பிரித் ஓதும் நிகழ்வும் அங்கு இடம்பெற்றது. ஜனாதிபதியைக் காண்பதற்காக பெருமளவு மக்கள் அப்பகுதியில் திரண்டதனால் யாழ். நாகவிகாரைப்பகுதி மற்றும் ஆரியகுளம் சந்திப்பகுதிகளில் பலத்த சனநெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. ![]() ![]() ![]() |
-
















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’