யாழ்.குடாநாட்டு மக்களின் பாரம்பரிய முறைக்கு ஏற்ப மேளதாள வாத்தியங்களுடன் மலர்மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் ஜனாதிபதிக்கு அங்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அச்சமயம் வீதியின் இருமருங்கிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகள் தோறும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பொதுமக்கள் கௌரவித்தனர். நல்லூர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்குகொண்ட ஜனாதிபதி அவர்கள் ஆலயச்சுற்றாடலில் தம்மைக்காண்பதற்காக திரண்டு நின்றிருந்த பெருமளவிலான பொதுமக்களையும் சந்தித்து அளவளாவியமை விசேட அம்சமாகும்.
























0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’