
நாட்டில் தற்போது 12 ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது? எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது எதுவும் எமக்குத் தெரியாது.
நாட்டை சிறைக்கூடமாக்கிவிட்டு ஒரு தேர்தல் அவசியம் தானா?" என இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பினார்.
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்கிரமபாகு மேலும் குறிப்பிடுகையில்,
"பெருந்தொகையான அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுடைய அடையாளங்களைக் காப்பதற்காக, தங்களுடைய உரிமைகளைப் பேணுவதற்காக குரல்கொடுத்தோரை எவ்வாறு கைது செய்ய முடியும்?
தமது மக்களுக்கு உணவில்லை, துயரத்துடன் இருக்கிறார்கள் என எழுதிய திஸ்ஸநாயகம் சிறை வைக்கப்பட்டார். என்னை விட குறைவான வார்த்தைகளே அவர் பேசினார். அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக விடுவிக்குமாறு நாம் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’