வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 மே, 2013

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு ஆதரவு: ஸ்ரீலால் லக்திலக்க

திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இன முரண்பாடுகளை களைவதற்கு வெளிநாட்டு தலையீடு இன்றி தீர்வு காண முடியும் : ஜீ.எல்.பீரிஸ்



ன முரண்பாடுகளை களைவதற்கு வெளிநாட்டு தலையீடு இன்றி தீர்வு காண முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப உள்நாட்டு பொறிமுறைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து முரண்பாடுகளை கூட்டமைப்பு தீர்த்துக்கொள்ளவேண்டும்: ரணில்

மிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்: அமெரிக்கா

ட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இலங்கை கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அமெரிக்கா அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்றன தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் முஸ்லிம், சிங்கள மீள்குடியேற்றம்; த.தே.கூ இனரீதியாக சிந்திக்கிறது: விமல்



'டக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்;, சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து விரட்டியடித்தனர். சமாதான சூழ்நிலை ஏற்பட்டு இடம்பெயர்ந்து வாழும் அம்மக்களை அரசாங்கம் மீளகுடியேற்ற முற்படும்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதனை இன ரீதியாக சிந்திக்கின்றனர்' என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

குருதி தோய்ந்த இவ்வரலாற்று நாளில், பரிதி துடைத்தெழுவோம் வாரீர்



ழிவுகளுக்குப் பிந்திய எமது மண்ணில் அமைதி நிலை வலுப்பெற்று வரும் நிலையில், உழைக்கும் மக்களின் உன்னத தினத்தில், அம்மக்களின் ஒளிமயமான எதிர்கால நலன்காக்க தொடர்ந்தும் நாம் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தல்

வுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை

ரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் கடத்தப்பட்ட வர்ததகர் ஹாலி- எலை பாழடைந்த வீட்டிலிருந்து மீட்பு


ன்றரை கோடி ரூபா கப்பம் கோரி கொழும்பில் கடத்தப்பட்டு கொழும்பு வர்த்தகர் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஹாலி எலையில் பாழடைந்த வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் கடத்தலுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்திருப்பதாக பதுளை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

30 ஆயிரம் கருத்தடை ஊசி மருந்தின் பின்னணி குறித்து ஆராய வேண்டும்: பொதுபலசேனா வலியுறுத்தல்

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்குக் கொள்கலன்களில் 30,000 கருத்தடை ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதானது பாரதூரமான விடயமாகும்.

'இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடை விதிக்க தீர்மானம்'



லங்கை கடல் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் சட்டவிரோதமான கட்டுப்பாடில்லாத களவான மீன்பிடித்தல் காரணமாக இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் யூன் 26 இல் தீர்மானிக்கவுள்ளது என அதிகாரிகள் கூறினர்.

திங்கள், 29 ஏப்ரல், 2013

யானை தாக்கி இருவர் பலி



திருக்கோவில், சாகாமம் - பெரியதளாவாய் வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு காவலுக்கு இருந்த ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

ரணில் – மன்னார் ஆயர் சந்திப்பு



ன்னாருக்காண விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் தனித்து பேசுவதில் அர்த்தமில்லை : பஷில்



னப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை.

வாள்வெட்டுக்கு இலக்காகி கடற் படையினர் பலி



னந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் யாழ். அனலைதீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

4 கட்சிகள் இணைந்து 'த.தே.கூ'வை பதிவுசெய்ய தீர்மானம் நிறைவேற்றம்

மிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சனி, 27 ஏப்ரல், 2013

இராணுவ முகாம்களோ பொலிஸ் நிலையங்களோ பொதுமக்களின் காட்சி கூடங்கள் அல்ல

இராணுவ முகாம்களோ பொலிஸ் நிலையங்களோ பொதுமக்களின் காட்சி கூடங்கள் அல்ல. எவ்விதமான முன் அறிவித்தலோ அனுமதியோ பெற்றுக் கொள்ளாமையினாலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் நுழைவாயிலில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

அரசியலில் சூழ்நிலைக் கைதியாக உள்ளேன்: ஹக்கீம்



Fஅரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே நாங்கள் தற்போது இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்க வேண்டும். நாங்கள் தனித்துவமாக முடிவினை எடுக்கும் காலம் வரும். அக்காலம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்காது' என்று நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஆஸி. வரும் இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுவர்:


கதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்துக்கான தகமைகள் இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தாது தனது தவறை உணர்ந்து தீர்வை வழங்க வேண்டும் : சம்பந்தன் எம்.பி.



லங்கையின் தேசிய பிரச்சினை சர்வதேச ரீதியில் சென்றமைக்கு உள்நாட்டில் பிரச்சினை தீர்க்கப்படாமையே காரணமாகும். அத்துடன் அரசு- கூட்டமைப்பு பேச்சுக்கள் தடைப்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.