வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
லக்பிம பத்திரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லக்பிம பத்திரிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 மார்ச், 2010

போர் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது : பான் கீ மூன்

போர் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட நிபுணர்கள் குழு விசாரணைகளை நடத்தாதென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திற்கும், அணி சேரா நாடுகள் அமைப்பிற்கும் அறிவித்துள்ளார்.
இந்த நிபுணர்கள் குழு தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சனி, 6 மார்ச், 2010

பொன்சேகா குறித்த நீதிமன்ற விசாரணைகளுக்கு ஊடகங்களுக்கு அனுமதியில்லை : இராணுவப் பேச்சாளர்


ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக விரைவில் இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவ நீதிமன்றங்களினால் நடத்தப்படும் விசாரணைகளின் போது, இராணுவ சட்டத்தின் அடிப்படையில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஜெனரல் சரத் பொன்சேகா குறித்த இராணுவ நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனித்து போட்டியிடத் திட்டம்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட பிள்ளையான் தீர்மானித்துள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு உத்தேசித்திருந்த போதிலும், உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை படகு சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.

ஜனாதிபதியை சந்திக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடாததினால், ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவை சந்தித்து பிள்ளையான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தேர்தலில் தனித்து போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணையத் தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

ரணில், சரத் பொன்சேகாவிற்கு எதிராக குமரன் பத்மநாதன் அறிக்கை வெளியிடவுள்ளார் : லக்பிம


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிரான வகையில் குமரன் பத்மநாதன் அறிக்கை வெளியிட உள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிடடுள்ளது.
குறித்த இருவருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் விரைவில் ஊடகங்களின் ஊடாக அறிக்கை வெளியிடுவார் என குறிப்பிடப்படுகிறது.

எதிர்க்கட்சி வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு எதிராக குமரன் பத்மநாதன் வெளியிட உள்ள தகவல்கள் தொடர்பில் விரைவில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.