வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சோமாலிய கடற் கொள்ளையர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோமாலிய கடற் கொள்ளையர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 டிசம்பர், 2010

13 இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிக்கப்பட்டது

13இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட சவூதி அரேபிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.

திங்கள், 29 நவம்பர், 2010

இலங்கை மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்

லங்கை மாலுமிகளையும் கொண்ட மலேஷிய சரக்குக் கப்பலொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த 26 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் கடற்கொள்ளை எதிர்ப்புப் படையணி இன்று தெரிவித்துள்ளது.

புதன், 12 மே, 2010

சோமாலிய கடற்கொள்ளையர் விடுவித்த இலங்கையர் அதிகாரிகளுடன் சந்திப்பு


சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் ஓமானிலுள்ள இலங்கை அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

புதன், 24 மார்ச், 2010

இலங்கையர் 23 பேர் கடத்தல்

இலங்கை பணியாளர்கள் 23 பேர் அடங்கிய வர்த்தக கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது. பிரித்தானிய பெர்முடாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக கப்பல் ஒன்றே இவ்வாறு கடற்கொள்ளையர்களால் பணயமாக பிடிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை

சோமாலியாவில் ஆறு மாத காலமாக சோமாலியாவில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கப்பல் மாலுமி ஒருவரும் இரண்டு சிப்பந்திகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வியாழன், 4 மார்ச், 2010

13 இலங்கையர்களுடன் சவுதிக்கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்


இலங்கையர்கள் 13 பேர் பணியாற்றும் சவுதிக்குச் சொந்தமான கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. நிசா-அல்-சவுதி எனப்படும் இக்கப்பல் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஆபிரிக்க சமுத்திர நடவடிக்கை தொட்ர்பான நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.

சோமாலிய கடற்பரப்புக்கு அண்மையிலுள்ள ஏடன் குடாப்பகுதியில் வைத்து இக்கப்பல் கடத்தப்பட்டுள்ளதுடன் 13 இலங்கையர்களும் ஒரு கிரேக்கரும் இக்கப்பலில் இருந்துள்ளனர்.

எரிபொருளை ஏற்றிச்செல்லும் இக்கப்பல் ஜப்பானிலிருந்து சவுதியின் ஜெட்டா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.

இக்கப்பல் தற்பொழுது சோமாலியாவின் கடற்பரப்பில் கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கென்ய கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை இக்கப்பலை விடுதலை செய்வதற்கு கொள்ளையர்களால் கப்பம் கோரப்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லைடி என்றும் கென்ய கடற்படை கூறியுள்ளது.

வெள்ளி, 4 டிசம்பர், 2009

சோமாலிய கொள்ளையரிடமிருந்து 7 இலங்கையர் விடுவிப்பு


சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எம்.வீ. சார்ளி எனப்படும் கப்பலில் கடமையாற்றிய இலங்கையர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்டனர்.

நியூசிலாந்துக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் குறித்த இலங்கையர்கள் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடற் கொள்ளையர்களுக்கும், நியூசிலாந்து கப்பல் நிறுவனத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இலங்கையர் உள்ளிட்ட கப்பல் பணியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சோமாலிய கடற் கொள்ளையர்கள் கோரிய கப்பப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது