வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 மார்ச், 2010

இலங்கையர் 23 பேர் கடத்தல்

இலங்கை பணியாளர்கள் 23 பேர் அடங்கிய வர்த்தக கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது. பிரித்தானிய பெர்முடாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக கப்பல் ஒன்றே இவ்வாறு கடற்கொள்ளையர்களால் பணயமாக பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 23 இலங்கை பணியாளர்களும், பிலிப்பைன்ஸ், மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்த இருவரும் பணியாற்றுகின்றனர்.
11 ஆயிரம் டொன் கொள்ளளவை கொண்ட டெல்கா எனும் இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால், ஓமான் கடற் பிராந்தியத்தில் இருந்து 120 கடல் மைல்களுக்கு அப்பால் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பல் கடத்தப்பட்ட வேளையில், எகிப்தில் இருந்து, ஈரானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
இதனிடையே, 13 இலங்கையர்கள் மற்றும் கிரோக்க நாட்டவர்கள் அடங்கிய பிறிதொரு கப்பல் இந்த மாத ஆரம்பத்தில், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராச்சியத்திற்கு சொந்தமான இந்த கப்பலையும், பணியாளர்களையும் மீட்பதற்காக, 2 கோடி அமெரிக்க டொலரை கொள்ளையர்கள் கப்பமாக கோரியுள்ளனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’