இலங்கையில் இருந்து இந்தோனேசியா வழியாக 250 அகதிகளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படும் கப்பல் தலைவனுக்கு இன்று நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
இந்தோனேஷிய நீதிமன்றம் இந்த அபராதத்தை இன்று விதித்தது.
கடந்த 2009 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையர்கள் 254 பேரை இந்தோனேஷிய கடற்பிராந்தியத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேசிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட ஆபிரகாம் லூஹனாபேசி, என்ற இந்த கப்பல் தலைவர் இன்று இந்தோனிசிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது மூவாயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன், 18 மாதங்கள் நன்னடத்தை காலமாக அறிவிக்கப்பட்டது.
அபராத தொகையை செலுத்தத் தவறினால், அவர் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவிக்க வேண்டியிருக்கும்.
அதேநேரம், நன்னடத்தை மாதங்களுக்குள் மீண்டும் தவறிழைத்தால் ஒருவருட கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவது இந்தோனேஷிய சட்டத்தின் கீழ் இன்னும் குற்றமாக கருதப்படவில்லை.
எனவேதான், குறைந்த பட்ச தண்டனை ஆபிரகாம் லூஹனாபேசிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2007 ம் ஆண்டு இதே குற்றத்திற்கு அவர் 20 மாதங்கள் சிறைத்தண்டணையை அனுபவித்திருந்தார். இந்தநிலையில் கடந்த வருடமே அவர் விடுதலையானார்.
இதுவரை வெளியான தகவல்களின் படி கப்பல் தலைவனான ஆபிரகாம் லூஹனாபேசி சுமார் ஆயிரத்து 500 பேரை அவுஸ்திரேலியாவிற்குள் கடந்த 10 வருடங்களுக்குள் கடத்திச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’