13இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட சவூதி அரேபிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.
ஒரு தொகை கப்பப்பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இக்கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
5136 தொன் எடைகொண்ட இக்கப்பல், ஜப்பானிலிருந்து சவூதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கு சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்டிருந்து. 13 இலங்கையர்களும் கிறீஸ் நாட்டவர் ஒருவரும் இக்கப்பலில் இருந்தனர்.
இந்நிலையில் கப்பப் பணம் வழங்கப்பட்ட நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இக்கப்பல் விடுவிக்கபபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’