வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கோத்தபாய ராஜபக்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோத்தபாய ராஜபக்ச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

இலங்கையில் பிரிவினை முனைப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்! கோத்தபாய ராஜபக்ச

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையிலான புதிய அரசாங்கம் புலிகள் அமைப்புக்கு மீளவும் உயிரூட்டும் வகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கு உறுதிபூண்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

சர்வதேச ஒத்துழைப்பின் மூலமே கே பியை கைது செய்ய முடிந்தது : கோத்தபாய

முறையான புலனாய்வு, சர்வதேசத்துடன் சிறந்த உறவுமுறை என்பனவே, தமிழீழ விடுதலைப்புலிகளின் கே பியை கைதுசெய்ய உதவியது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சனி, 27 பிப்ரவரி, 2010

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு இனி இராணுவ பாதுகாப்பு இல்லை: பாதுகாப்பு செயலாளர்


இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இனி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதிபாதுகாப்புத் தேவைப்படுவோருக்கு மட்டுமே .ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் தவிர்ந்த மற்றைய அரசியல் தலைவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் என கோத்தபாய தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பான கேள்வியொன்றுக்கு பதில் அளித்த கோத்தபாய, பிள்ளையானின் பாதுகாப்பு நீக்கப்படவில்லையென்றும் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய முடிவின்படி அவரது இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இராணுவப் பிரிவுகளுக்கும் அரசியலுக்கும் இடைவெளி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இது அமையும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

வியாழன், 11 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் சிறை?


இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது:-

இலங்கை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்குமாறு இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தார்.

உலகநாடுகளும் பொன்சேகா கைதை கண்டித்தன. பொன்சேகாவின் மனைவி இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

திங்கள், 14 டிசம்பர், 2009

சரத் பொன்சேகாவை பொறுத்த வரையில் அவர் ஒரு சாதாரண தளபதி; யுத்த வெற்றிக்கு அவர் காரணமல்ல : கோத்தபாய


சரத் பொன்சேகாவை தாம் ஒரு சிறந்த இராணுவ தளபதியாக பயன்படுத்தியதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவின் இடத்தில் மற்றும் ஒருவர் இருந்திருந்தால், அவரும் தமது கடமையை உரியமுறையில் செய்திருப்பார் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது உரிய அரசியல் தலைமைத்துவம் வழங்கப்பட்டது. உரிய ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. படைவீரர்களின் தொகை அதிகரிக்கப்பட்டது. சர்வதேச அழுத்தங்கள் தடுக்கப்பட்டன. இவையாவுமே யுத்த வெற்றிக்கு காரணமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த யுத்த வெற்றிக்கு தரைப்படை மட்டுமல்லாமல் வான் படை மற்றும் கடற்படையும் பங்களிப்பை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை பொறுத்தவரையில் அவர் ஒரு சாதாரண தளபதி, அவருடைய தொழிலை அவர் செய்தார். சரத் பொன்சேகா முன்னாள் இராணுவ தளபதிகளான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன ஆகியோரை போன்று சிறந்த தளபதியல்ல. பாரிய யுத்த முன்னெடுப்புகளை அவர் மேற்கொள்ளவில்லை. அவர் முன்னர் பல யுத்த தோல்விகளை சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து படைகளை திரும்பப் பெற கூறியவரும் அவர்தான். 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் சரத் பொன்சேகாவை நாடு அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில், சவேந்திர சில்வா, கமல் குணரட்ன, சாரி கலகே மற்றும் பிரசன்ன சில்வா போன்ற படைத்தளபதிகள் யுத்தகளத்தில் சிறந்த சேவையாற்றியுள்ளார்கள் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிடுவதனால் அவரை துரோகி என கூறவில்லை எனக்குறிப்பிட்டுள்ள கோத்தபாய, நாட்டு மக்களுக்கு படையினர் தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கிவருபவர்களே துரோகிகள் என அழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தின் பின்னர் சீனாவில் இருந்து பாரியத்தொகை ஆட்டிலறி உந்துகளை பல மில்லியன் ரூபாய்களுக்கு கொள்வனவு செய்ய வரையறுக்கப்பபட்ட லங்கா லொஜிஸ்டிக் அன்ட் டென்னோலொஜிஸ் நிறுவனம் முயன்றதாகவும் அதனை தாம் தடுத்ததாகவும் சரத் பொன்சேகா கூறியிருந்தமையை மறுத்துரைத்த கோத்தபாய ராஜபக்ச, தாமே அதனை தடுத்து நிறுத்தியதாகவும் சரத் பொன்சேகாவுக்கு அந்த அதிகாரம் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

குறித்த ஆயுதக்கப்பல், திருப்பியனுப்பட்டதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் விசாரணைகள் எவையும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு மனிதனுக்கு சுதந்திரம் உள்ளது இந்தவகையில் சரத் பொன்சேகாவுக்கும் சுதந்திரம் உள்ளதுதானே என கோத்தபாயவிடம் கேட்ட போது, ஆம் அதற்கு சுதந்திரம் உள்ளது. ஒரு மனிதனை கொல்வதற்கும் சுதந்திரம் உள்ளது என பதிலளித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதும், ஒரு மனிதனை கொல்வதும் இரண்டு வெவ்வேறு விடயங்களாகும் என சுட்டிக்காட்டி போது, எவரும் எதனையும் செய்ய சுதந்திரம் உள்ளது. ஆனால் அதற்கு நியாயங்கள் இருக்க வேண்டும் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.