வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

இலங்கையில் பிரிவினை முனைப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்! கோத்தபாய ராஜபக்ச

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையிலான புதிய அரசாங்கம் புலிகள் அமைப்புக்கு மீளவும் உயிரூட்டும் வகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கு உறுதிபூண்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் கூறினார்.
பயங்கரவாதம் நாட்டில் மீண்டும் உதயமாவதற்கு சிறிலங்கா அரசு ஒருபோதும் இடமளிக்காது எனக் குறிப்பிட்ட கோத்தபாய நாட்டில் பிரிவினைவாதக் கருத்துக்களை யார் முன்வைத்தாலும் அவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஏழாவது நாடாளுமன்றில் புதிய சட்ட வரைபுகள் முன்வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் புலி ஆதரவு அமைப்புகள் சிறிலங்கா அரசினைக் களங்கப்படுத்தும் செயற்பாடுகளை முடுக்கி விட்டிருப்பதாகக் கூறிய கோத்தபாய வெளிநாட்டு அரசியல்வாதிகளின் மனங்களை வெல்லும் நோக்குடன் உலகத் தமிழர் பேரவை செயற்பட்டுவருவதாகக் கூறினார்.
புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட புதியதோர் சூழமைவில் மக்களால் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நாட்டில் ஏற்படக்கூடிய பிரிவினைவாதம் சார்ந்த சவால்களை முறியடிக்கவேண்டிய கட்டாய கடப்பாடு புதிய அரசாங்கதிற்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’