வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் கொல்லப்பட்டதாக புகார்


மிழக மீனவர் ஒருவர் நேற்றிரவு இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புஷ்பவனத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெயகுமார் என்ற மீனவரே கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரின் சடலம் இன்று குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

கச்சத்தீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர் படையெடுப்பு!

ந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் (ஒக்டோபர்) 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

திங்கள், 12 ஜூலை, 2010

இந்திய மீனவர் மீது தாக்குதல் : இலங்கைக் கடற்படை மறுப்பு

கடற்றொழிலில் இந்திய மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கப்படும் புகார்கள் குறித்து இலங்கைக் கடற்படையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 29 டிசம்பர், 2009

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், பத்து மீனவர்கள் காயம், மீன்பிடி உபகரணங்கள் சேதம்-


தமிழகம் இராமேஸ்வரம் கடற்பரப்பிலிருந்து மீன்பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

இந்திய மீனவர் மீது தாக்குதல் : கடற்படைப் பேச்சாளர் மறுப்பு


இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இந்திய ஊடகங்களில் வெளியானது போன்று இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்கத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் 40 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களது உபகரணங்கள் சேததப்படுத்தப்பட்டதாகவும் 'டைம்ஸ் இந்தியா' செய்தி வெளியிட்டிருந்தது.

பிடிக்கப்பட்ட மீன் வகைகளை படையினர் மீண்டும் கடலில் எறிந்ததாகவும், ஒரு படகு முழுமையாக சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தாக்கப்பட்ட மீனவர்கள் நீந்தி இந்தியாவை அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும், கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.