வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் கொல்லப்பட்டதாக புகார்


மிழக மீனவர் ஒருவர் நேற்றிரவு இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புஷ்பவனத்தைச் சேர்ந்த 28 வயதான ஜெயகுமார் என்ற மீனவரே கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரின் சடலம் இன்று குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 10 நாட்களில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியை அவரின் இல்லத்தில் சந்தித்த இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இசம்பவம் குறித்து பிரஸ்தாபித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தள்ளதாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’